How deep, true and conquers time.
கலையாத கல்வியும் குறையாத வயதுமொரு கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும் கழுப்பிணி இலாத உடலும்
சலியாத மனமும் அன்பகலாத மனைவியும் தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு துன்பமில்லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவி
பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலுமாயனது தங்கையே
ஆதி கடவூரின் வாழ்வே
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி அபிராமியே
No comments:
Post a Comment